/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தணும்!
/
தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தணும்!
ADDED : பிப் 15, 2025 07:34 AM
திருப்பூர்; குழந்தைகள் உயிரிழப்பை தடுப்பதற்கான செயல்திட்டங்களை பொது சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.
இதற்காக, குழந்தைகள் நோய்வாய்ப்படுதல் மற்றும் உயிரிழப்பை முழுமையாக தடுக்க ஆரம்ப நிலையில் பாதிப்புகளை கண்டறிந்து, குணப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
எனவே, பிறந்த குழந்தை முதல், 18 வயது வரை உள்ள அனைவருக்கும், 30 வகையான உடல்பாதிப்புகளில் ஏதேனும் உள்ளதா என்பதை தொடக்கத்திலேயே கண்டறியும் தேசிய குழந்தைகள் நல மருத்துவ பரிசோதனைத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பரிசோதனை திட்டத்தின் மூலம் குழந் தையின் பிறவியிலேயே உள்ள பாதிப்புகள், பிறந்த பிறகு ஏற்படும் குறைபாடுகள், நோய்கள், வளர்ச்சி குறைபாடு உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவிலான மருத்துவக் குழுவினர் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை முகாம்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், சமூக நலத்துறையினருடன் இணைந்து நாள்தோறும் நடக்கும் முகாம்களை, கண்காணிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்களை தேவைப்படும் இடங்களில் திட்டமிட்டு நடத்த வேண்டும், என, மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.