/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வலைதளத்தில் 'கருத்து மோதல்'; நடுரோட்டில் மாணவியர் மோதல்
/
வலைதளத்தில் 'கருத்து மோதல்'; நடுரோட்டில் மாணவியர் மோதல்
வலைதளத்தில் 'கருத்து மோதல்'; நடுரோட்டில் மாணவியர் மோதல்
வலைதளத்தில் 'கருத்து மோதல்'; நடுரோட்டில் மாணவியர் மோதல்
ADDED : ஜூன் 25, 2025 11:51 PM

பல்லடம்; இன்ஸ்டாகிராம் குழுவில் மாணவியர் இடையே வெடித்த கருத்து மோதல், நடுரோட்டில் மாணவியர் இடையேயான நேரடி மோதலாக மாறியது.
பல்லடம் அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர், இன்ஸ்டாகிராம் குழு ஒன்றை ஆரம்பித்தனர். இப்பள்ளி மாணவியர் சிலரின் தோழிகள் திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும் படிக்கின்றனர்.
தங்கள் தோழிகளையும் குழுவில் சேர்த்தனர். குழுவில் உள்ள அரசுப்பள்ளி மாணவியருக்கும், மாநகராட்சி பள்ளி மாணவியருக்கும் இடையே இன்ஸ்டாகிராமில் கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கருத்து மோதல் முற்றிய நிலையில், நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்ததும், திருப்பூரில் இருந்து பஸ் ஏறி புறப்பட்ட மாநகராட்சி பள்ளி மாணவியர் சிலர், அரசுப்பள்ளி அமைந்துள்ள ஊரில் வந்து இறங்கினர்.
அங்கு, பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவியருக்கும், மாநகராட்சி பள்ளி மாணவியருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்காக, மாணவியர் சிலர் முகத்தில் 'மாஸ்க்' அணிந்தபடியும் வந்திருந்தனர்.
அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர், மாணவியரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த ரோட்டில், மாணவியர் பகிரங்கமாக மோதலில் ஈடுபட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோதலில் ஈடுபட முயன்ற மாணவியரின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, மாணவியருக்கு கவுன்சிலிங் வழங்கவும் பள்ளி நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளன.
மாணவர்களுக்கு இணையாக, தற்போது மாணவியரும் ரோட்டில், வாக்குவாதத்தில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.