sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுப்பதில்... நீடிக்கும் குழப்பம்!முதல்வர் அறிவித்தாலும் அதிகாரிகள் 'கப்சிப்'

/

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுப்பதில்... நீடிக்கும் குழப்பம்!முதல்வர் அறிவித்தாலும் அதிகாரிகள் 'கப்சிப்'

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுப்பதில்... நீடிக்கும் குழப்பம்!முதல்வர் அறிவித்தாலும் அதிகாரிகள் 'கப்சிப்'

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுப்பதில்... நீடிக்கும் குழப்பம்!முதல்வர் அறிவித்தாலும் அதிகாரிகள் 'கப்சிப்'


ADDED : ஜூலை 10, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;திருமூர்த்தி அணை மற்றும் குளம், குட்டைகளில் விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பித்தும், மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக அரசு, 'நீர் நிலைகளில், விவசாயிகள் வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ளவும், மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மண் எடுத்துக்கொள்ளலாம், என கடந்த மாதம் அறிவித்தது.

கடந்த, ஜூன் 27ல், மாவட்ட அரசிதழில், நீர் நிலைகள் பட்டியல் வெளியிட்டு,இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், மாவட்ட அரசிதழ் முறையாக அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படவில்லை; பின்னர், அரசு இணையதளத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண் எடுக்க விண்ணப்பித்தனர். இதுவரை உரிய அனுமதி வழங்காமல், வருவாய்த்துறையிர் இழுத்தடித்து வருகின்றனர்.

அதிகாரிகள் இழுத்தடிப்பு


விவசாயிகள் கூறியதாவது : இத்திட்டத்தை எளிமைப்படுத்துவதாக முதல்வர் அறிவித்த நிலையில், திட்டம் துவங்க ஒரு மாதமானது. அதற்கு பின், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், இணைய தள முகவரி வழக்கப்பட்டு, இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

நீர் நிலைகள் பட்டியல் அதில் இருந்ததால், தங்களுக்கு அருகிலுள்ள நீர் நிலைகளுக்கு விண்ணப்பித்தனர். ஏற்கனவே, அரசு இணைய தளத்திலுள்ள நிலத்தின் 'சிட்டா' பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, வி.ஏ.ஓ.,விடம், நில உரிமைச்சான்று வாங்கி இணைக்க வேண்டும், என கூறி அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

வருவாய்த்துறை ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், வி.ஏ.ஓ., அந்த ஆவணம் அடிப்படையிலேயே சான்று வழங்குகிறார்.

வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கு சென்றால், நில உரிமைச்சான்று தர உயர் அதிகாரிகள் உத்தரவு இல்லை என இழுத்தடித்து வருவதோடு, தனி பட்டா இருந்தால் வழங்க முடியாது என்கின்றனர்.

திட்டத்தை எளிமைப்படுத்தி, அதிகாரிகளுக்கு லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகப்படுத்தினாலும், மீண்டும் அதிகாரிகளை சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளனர்.

அனுமதி வாங்குவதிலேயே சிக்கல் நீடித்து வரும் நிலையில், அனுமதி பெற்றாலும், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நீர் நிலைகளில் மண் எடுக்க வேண்டிய பகுதிகள் , அளவு குறித்து அளவீடு செய்தும், டோக்கன் வழங்க வேண்டும்.

பின்னர், வாகனங்கள் செல்ல நீர் நிலைகள் பாதிக்காத வகையில் தடம் அமைத்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் உள்ளன.

அதிகாரிகள் இழுத்தடிப்பதால், திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன், பருவ மழை துவங்கி, வீணாகும் நிலை உள்ளது. எனவே, திருப்பூர் கலெக்டர், அரசுத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைந்து, திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

குளம், குட்டைகளை காணவில்லை

உடுமலை தாலுகாவில், நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமூர்த்தி அணையில், மண் எடுத்துக்கொள்ள, 4 சர்வே எண்களில், 98 ஆயிரத்து, 100 கன மீட்டர்; பெரியகுளத்தில், 30 ஆயிரம்; கரிசல் குளம், தினைக்குளத்தில், தலா, 15 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முறையாக பட்டியல் வழங்கப்படவில்லை. உடுமலை ஒன்றியத்தில், 118 குளம், குட்டைகள் உள்ள நிலையில், 4 குளங்களும், குடிமங்கலம் ஒன்றியத்தில், 74 குளங்கள் உள்ள நிலையில், 11 குளங்கள் மட்டுமே பட்டியலில் உள்ளது. அவற்றிலும், மண் எடுக்கப்பட்டு, வெறும் பாறைகள் மட்டுமே உள்ளன.மடத்துக்குளம் ஒன்றியத்தில், 33 குளங்கள் உள்ள நிலையில், 4 மட்டுமே பட்டியலில் உள்ளது. மாவட்ட அரசிதழில், தாராபுரம் பகுதியிலுள்ள குளங்கள், உடுமலை தாலுகாவில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த குழப்பங்களுக்கு தீர்வு காணவும், விவசாயிகள் அருகிலுள்ள குளங்களில் மண் எடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us