/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியலில் குழப்பம் பா.ஜ. - தி.மு.க. வாக்குவாதம்
/
வாக்காளர் பட்டியலில் குழப்பம் பா.ஜ. - தி.மு.க. வாக்குவாதம்
வாக்காளர் பட்டியலில் குழப்பம் பா.ஜ. - தி.மு.க. வாக்குவாதம்
வாக்காளர் பட்டியலில் குழப்பம் பா.ஜ. - தி.மு.க. வாக்குவாதம்
ADDED : ஜன 14, 2026 06:54 AM
திருப்பூர்: விஜயாபுரம் பகுதியில் எஸ்.ஐ.ஆர். பணியில் நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் சேர்க்க அழைத்து வரப்பட்டனர். இது தொடர்பாக பா.ஜ. மற்றும் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்றது. அதனடிப்படையில், திருத்தங்களுக்கு தற்போது மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று திருப்பூர் மாநகராட்சி விஜயாபுரம் துவக்கப்பள்ளி ஓட்டுச் சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் சிலர் பெயர்கள் பரிந்துரை செய்து நீக்கப்பட்டிருந்தது.
அவ்வகையில், நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட, 10 பெயர்கள் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் அங்கு திரண்டு நீக்கப்பட்ட வாக்காளர்கள் இங்கு தான் வசிக்கின்றனர். அவர்கள் பெயர் எப்படி நீக்கம் செய்யப்பட்டது. பா.ஜ.வினர் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்த பா.ஜ.வினர், எஸ்.ஐ.ஆர், பணியின் போது அந்த வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை. எனவே அவர்கள் இடமாறுதலாகி விட்டதாக பரிந்துரைக்கப்பட்டது. இதில், எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.
எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டிருந்த தி.மு.க.வினர் அப்போதே தெளிவுபடுத்தியிருக்கலாம். உரிய ஆதாரங்கள் இருந்தால் தேர்தல் பிரிவினர் அந்த பெயர்களை சேர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை, என்றனர்.
அப்போது, இரு தரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து நல்லுார் போலீசார் விரைந்து சென்று, இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

