/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 18, 2025 09:06 PM

உடுமலை; உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டில் நடந்த முதல் பருவத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். முதல் இடை பருவத்தேர்வில் பிளஸ் 2 வகுப்பில், கணிதம், வணிகவியல், கணக்கு பதிவியல், வரலாறு பாடங்களில் சதம் பெற்ற மாணவர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வரும் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவதற்கு, ஆசிரியர்கள் ஊக்குவித்தனர். உதவி தலைமையாசிரியர் சேஷநாராயணன் நன்றி தெரிவித்தார்.