/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தங்கப்பதக்கம் பெற்ற மாணவருக்கு பாராட்டு
/
தங்கப்பதக்கம் பெற்ற மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 25, 2025 08:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு, கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
2024-25 கல்வியாண்டுக்கான, மாநில அளவிலான தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் பரிசளிப்பு விழா நடந்தது.
தடகளப் போட்டியில் 80 மீ., தடை தாண்டுதல் பிரிவில், உடுமலை கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் இளமுகிலன் பங்கேற்று, மாநில அளவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளி தாளாளர் சின்னராசு, பள்ளி முதல்வர் சாரதாமணி தேவி, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.