/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாள் வீச்சு வீராங்கனை கலெக்டர் வாழ்த்து
/
வாள் வீச்சு வீராங்கனை கலெக்டர் வாழ்த்து
ADDED : ஜன 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;சர்வதேச அளவில் நடக்கவுள்ள வாள் சண்டை போட்டியில் பங்கேற்கும் மாணவியை கலெக்டர் வாழ்த்தினார்.
சட்டீஸ்கரில் நடக்கவுள்ள தேசிய அளவிலான, 67வது பள்ளிகளுக்கு இடையேயான வாள்வீச்சு போட்டியில், 14 வயதினருக்கான பிரிவில், வீரபாண்டி பிரிவு, விருக்ஷா சர்வதேச பள்ளி மாணவி, ஸ்ரீ வர்ஷினி பங்கேற்க உள்ளார். அவரை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், வாழ்த்தினார்.
பள்ளி தாளாளர் ராஜலட்சுமி, பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன், பள்ளி முதல்வர் ஹேமலதா உள்ளிட்டோரும் அவரை வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.