/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கிரஸ் மாவட்ட செயற்குழு; எதிரொலித்த கோஷ்டிப்பூசல்
/
காங்கிரஸ் மாவட்ட செயற்குழு; எதிரொலித்த கோஷ்டிப்பூசல்
காங்கிரஸ் மாவட்ட செயற்குழு; எதிரொலித்த கோஷ்டிப்பூசல்
காங்கிரஸ் மாவட்ட செயற்குழு; எதிரொலித்த கோஷ்டிப்பூசல்
ADDED : நவ 25, 2024 06:32 AM

திருப்பூர்; திருப்பூரில் நேற்று நடந்த காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்துக்கு துணைத்தலைவர் தரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., செயற்குழு அவசரக் கூட்டம், திருப்பூரில் நேற்று காலை 11:00 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட தலைவர் மற்றும் தேசிய செயலாளராக உள்ள கோபிநாத்தும், துணைத்தலைவர் பாலசுப்ரமணியமும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.
பாலசுப்ரமணியம் தரப்பினருக்கு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்தனர். இதனால், 'கூட்டம் ரத்து செய்யப்படும்' என, மாவட்ட தலைவர் கோபிநாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கூட்டம் துவங்கப்படாமல் குழப்பம் நீடித்தது. பாலசுப்ரமணியம் மற்றும் கோபிநாத் உள்ளிட்டோரிடம் மேலிட பார்வையாளர்கள் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின், பகல் 1:00 மணிக்கு கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர்.
பாலசுப்ரமணியம் கூறுகையில், ''இருதரப்பினரிடம் உள்ள பிரச்னைகள் குறித்து கட்சி மேலிடத்துக்கும் தெரியும்.
இதற்காக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி சரியாகும்?'' என்றார்.
கோபிநாத் கூறுகையில், ''எந்த பாகுபாடும், கருத்து வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து கட்சிப் பணி தொடரும்'' என்றார்.