/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மன்மோகன் படத்துக்கு காங்கிரசார் மலரஞ்சலி
/
மன்மோகன் படத்துக்கு காங்கிரசார் மலரஞ்சலி
ADDED : டிச 27, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்,; மறைந்த முன்னாள் பிரதமர், பொருளாதார மேதை மன்மோகன் சிங்கிற்கு, திருப்பூர் மாநகர மாவட்ட காங்., கமிட்டி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், அவரது படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. மாந கர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, கோபால்சாமி, ஈஸ்வரன், மாநில இளைஞர் காங்., நிர்வாகிகள் அருண், கதிரேசன், குருசாமி, வட்டார தலைவர் பன்னீர்செல்வம், கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துக்கம் அனுசரிக்கும் விதமாக, கட்சிக் கொடி கம்பங்களில், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

