ADDED : ஏப் 07, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மும்மொழி கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகர மாவட்ட காங்., சார்பில், குமரன் சிலை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் கோபால்சாமி, சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் காஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

