/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணிகள் இழுபறி; காங்., ஆர்ப்பாட்டம்
/
பணிகள் இழுபறி; காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 12, 2024 06:38 AM

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு - செவந்தாம்பாளையம் இடையே ரிங் ரோடு பணி நீண்ட நாட்களாக நடக்காமல் பெரும் அவதி நிலவுகிறது.
காசிபாளையம் ரோட்டில், கட்டிய பிரதான கால்வாய் நிறைவு பெறாமல் இருப்பதால், கட்டியும் பயனற்றுக் கிடக்கிறது.
இதுதவிர, 48வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பிரதான குடியிருப்பு பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இப்பகுதிகளில் ஒப்புதல் பெறப்பட்ட ரோடுகள் போட முடியாமல் இழுபறியாக உள்ளது.
இப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், மாநகராட்சியில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தியும், நேற்று நல்லுாரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்., தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி பேசினார். இதில் காங்., கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.