ADDED : ஆக 14, 2026 05:56 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:திருப்பூர்
மாவட்டம் செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் ஐயப்பன், 65;
ஊதியூரை
அடுத்த நொச்சிப்பாளையம் தனியார் நிறுவன காவலாளி. பைக்கில்
நொச்சிபாளையத்திலிருந்து செங்கோடம்பாளையம் செல்ல, வறட்டுக்கரை
அருகே, நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்றார். அப்போது நடந்து
செனற்ற அதே பகுதியைச் சேர்ந்த பூபதி மீது பைக் மோதியது. இதில் நிலை
தடுமாறி விழுந்த ஐயப்பன், தலையில் பலத்த காயமடைந்தார்.
இருவரும்
மீட்கப்பட்டு காங்கேயம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் ஐயப்பன் ஏற்கனவே இறந்து
விட்டது தெரிய வந்தது. விபத்து குறித்து ஊதியூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.
