ADDED : நவ 26, 2026 09:30 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர், பல்லடம் ரோடு, காந்தி வித்யாலயா பள்ளியில் தேசிய அரசியல் அமைப்பு தின விழா நடைபெற்றது.
பள்ளியில் இன்று (நவ.,26) இந்திய அரசியலமைப்பு 77 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முன்னதாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து அரசியல் அமைப்பு சட்டத்தின் முக்கியத்துவம், அடிப்படை உரிமை சட்டம், குற்றவியல் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சந்தோஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
