/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவில் இன்ஜினியர்ஸ் சங்கம் சார்பில் 'கன்ஸ்ட்ரோ மெகா' துவங்கியது
/
சிவில் இன்ஜினியர்ஸ் சங்கம் சார்பில் 'கன்ஸ்ட்ரோ மெகா' துவங்கியது
சிவில் இன்ஜினியர்ஸ் சங்கம் சார்பில் 'கன்ஸ்ட்ரோ மெகா' துவங்கியது
சிவில் இன்ஜினியர்ஸ் சங்கம் சார்பில் 'கன்ஸ்ட்ரோ மெகா' துவங்கியது
ADDED : ஜூலை 18, 2025 11:35 PM

திருப்பூர்; திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில், 20வது ஆண்டு கட்டுமானப் பொருள் கண்காட்சி, 'கன்ஸ்ட்ரோ மெகா 2025' நேற்று திருப்பூரில் துவங்கியது.
திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில் இக்கண்காட்சியை எம்.பி,. சுப்பராயன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை சென்று பார்வையிட்டனர்.
முன்னதாக சங்க தலைவர் குமார் சண்முகம் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். கண்காட்சி தலைவர் பிரகாஷ் கண்காட்சி குறித்து விளக்கி அறிக்கை வாசித்தார்.
கண்காட்சியை முன்னிட்டு, 'பொறியியல் பொக்கிஷம் 2025' என்ற நுாலை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் வெளியிட, மேயர் தினேஷ்குமார் பெற்றுக் கொண்டார். துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள், அசோசியேஷன் முன்னாள் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், அரங்கு அமைப்பாளர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
நேற்று துவங்கிய கண்காட்சி, 21ம் தேதி வரை நான்கு நாள் நடைபெறுகிறது. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.
தினமும் மாலை கலை நிகழ்ச்சி நடைபெறும். இன்றும் நாளையும், மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு இலவச மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது.
முற்றிலும் 'ஏசி' வசதி செய்யப்பட்ட கண்காட்சி அரங்கில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஸ்டால் அமைத்துள்ளன. கட்டடங்களுக்குத் தேவையான மணல், சிமென்ட், இரும்பு, பெயிண்ட், செங்கல், ரெடிமேட் கான்கிரீட் ஆகியன உற்பத்தி மற்றும் விற்பனை, டைல்ஸ், கிரானைட்ஸ், மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள், அலுமினிய பார்ட்டிஷன், ஜன்னல் - கதவு, கண்ணாடிகள், பர்னிச்சர், உபகரணங்கள், சிசிடிவி கேமரா, லாக்கர், எலக்ட்ரானிக், எலக்ட்ரிகல் பொருட்கள், ஆட்டோமேஷன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள் என அனைத்து விதமான நிறுவனங்களும் ஸ்டால் அமைத்துள்ளன.