/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுப்பள்ளியில் கட்டமைப்பு; எஸ்.எம்.சி., கூட்டத்தில் முடிவு
/
அரசுப்பள்ளியில் கட்டமைப்பு; எஸ்.எம்.சி., கூட்டத்தில் முடிவு
அரசுப்பள்ளியில் கட்டமைப்பு; எஸ்.எம்.சி., கூட்டத்தில் முடிவு
அரசுப்பள்ளியில் கட்டமைப்பு; எஸ்.எம்.சி., கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூலை 28, 2025 10:46 PM
அவிநாசி; அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 2025 - 26ம் ஆண்டு, பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம், பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளியின் செயல்பாடுகள் குறித்து, உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை கூறினர். பின், சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாணவிகளுக்கு போதியளவில் கழிப்பறை இல்லாததால், வீடுகளுக்கு சென்றே சிறுநீர் கழிப்பதாக தெரிய வருகிறது. இதனால், தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புண்டு.
எனவே, மாணவியருக்கு உரிய வசதிகளுடன் கூடிய கழிப்பிடம் கட்டுவது, 1 முதல், 7ம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் தரையில் அமர்ந்து கல்வி பயில்வதால், அவர்களுக்கு டெஸ்க், பெஞ்ச்ஏற்பாடு செய்துதருவதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்துவது; பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை வெளியிடங்களில் பயிற்சி கொடுத்து, அவர்களின் திறமையை வெளிக்கொணர செய்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பூண்டி நகராட்சி கவுன்சிலர் பாரதி மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.