UPDATED : அக் 19, 2026 04:29 PM
ADDED : அக் 19, 2026 04:26 PM
உடுமலை: உடுமலை கொழுமம் ரோடு ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலம் அமைக்க வேண்டும்.
உடுமலை காந்திநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து குமரலிங்கம் செல்லும் ரோடு, 18.80 கி.மீ., தொலைவுடையது. உடுமலையிலிருந்து பழநிக்கு செல்ல மாற்றுப்பாதையாக உள்ள ரோட்டில், 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சுற்றுலா வாகனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளிலிருந்து பழநிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களும் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த ரோட்டில், நகர எல்லையில், அகல ரயில்பாதை அமைந்துள்ளது. இந்த ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு, ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, ரயில்வே ‘கேட்’ அடிக்கடி மூடப்படும் போது, வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை வரை அணிவகுத்து நிற்கின்றன.
கொழுமம் ரோட்டில், செல்லும் வாகனங்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தி, மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
