ADDED : ஏப் 22, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மூத்த ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளார். 40 வயதுக்கு உட்பட்ட, முதுகலை பட்டதாரி, சமூக பணிகளில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து மீட்பு, ஆலோசனை வழங்குதல் தொடர்பான பணியில் மூன்று ஆண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும். சம்பளம் 22 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விருப்பமுள்ளோர், கலெக்டர் அலுவலக தரைதளம், அறை எண்: 35ல் செயல்படும் சமூக நல அலுவலகத்தில், வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்கவேண்டும்.