/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து ஆலோசனை
/
கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து ஆலோசனை
கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து ஆலோசனை
கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து ஆலோசனை
ADDED : டிச 12, 2025 07:06 AM

பெருமாநல்லூர்: பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கும்பாபிேஷகம் நடத்துவதற்காக, 3.60 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம், 6.34 கோடி ரூபாய் மதிப்பில் திருமாளிகை பத்தி மண்டபம், 2.42 கோடி ரூபாய் மதிப்பில் வசந்த மண்டபம் மற்றும் சுற்றுச்சுவர், முத்துக்குமார சுவாமி, விநாயகர் கோவில் சன்னதி உள்ளிட்டவை உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்பின் வாயிலாக மேற்கொள்ள அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
முதல் கட்டமாக, 66 அடி உயரத்தில், 43க்கு 23 அடி அகலத்தில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.
தொடர்ந்து, அடுத்தடுத்த திருப்பணிகள் மேற்கொள்ளவும், அதற்கான நன்கொடை பெறுவது குறித்து ஆலோசிக்கவும், திருப்பணி திருமுகம் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள், சுந்தரமுத்து, திருமூர்த்தி, ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சங்கர சுந்தரேசுவரன் வரவேற்றார்.
ராஜ கோபுரம் நான்கு நிலைகள், குறிஞ்சி மண்டபம், கொடிமரம், முத்துக்குமாரசாமி, விநாயகர் சன்னதி, சுற்றுச் சுவர் என ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு உபயதாரர்கள் மற்றும் கூட்டாகவும் நிதி வழங்க பொறுப்பேற்று கொண்டனர். அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ள தொழிலதிபர்கள், பக்தர்களிடம் நன்கொடை பெறவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 30 பேர் கொண்ட திருப்பணி வசூல் கமிட்டி அமைப்பது, திருப்பணியை விரைவாக மேற்கொள்ள, 30 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கோவில் மிராசுதாரர்கள், மண்டப கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், ஊர் பொது மக்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

