/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுக்கம் விழுப்பம் தரும்; மாணவர்களுக்கு அறிவுரை
/
ஒழுக்கம் விழுப்பம் தரும்; மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : டிச 12, 2025 07:08 AM

திருப்பூர்: திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத தயாராகி வரும் மாணவர்களை நல்வழிப்படுத்த, பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி கல்வித்துறை, மாநகர போலீசார் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் கர்னல் வரவேற்றார்.
வடக்கு போலீஸ் எஸ்.ஐ. குமார் பேசியதாவது: படிக்க வேண்டிய வயதில் தடம் மாறி பயணிக்கக்கூடாது. நல்ல வழியில் சென்றால் வாழ்க்கை சிறக்கும்; டாக்டர், இன்ஜினியர், கலெக்டர், போலீஸ் அதிகாரி ஆகலாம். குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் பொறுப்பு உள்ள ஒருவனாக நீங்கள் மாற முடியும். பொதுத்தேர்வுகள் நெருங்கி வருகிறது. படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்; ஒழுக்கத்துடன் பயிலும் கல்வியே சிறந்தது. வாழ்வுக்கும், வேலைக்கு வழிகாட்டும் கல்வியை கற்றுத்தரும் போது, படித்து, தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் மதிப்பு கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.
எதிர்காலத்தை எண்ணிப்பாருங்கள். அதன்படி நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

