/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் விதிமுறை குறித்து கட்சியினருடன் ஆலோசனை
/
தேர்தல் விதிமுறை குறித்து கட்சியினருடன் ஆலோசனை
ADDED : மார் 18, 2026 07:46 AM
காங்கேயம்:அனைத்து கட்சியினர் பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிமுறை குறித்த ஆலோசனை கூட்டம், காங்கேயம் தாசில்தார் அலுவல-கத்தில் நடந்தது.
திருப்பூர் மாவட்ட கலால் உதவி ஆணையரும், காங்கேயம் தொகுதி உதவி தேர்தல் அலுவலருமான பாலமுருகன் தலைமை வகித்தார். தாசில்தார் தங்கவேல் முன்னிலை வகுத்தார். தி.மு.க., - அ.தி.மு.க., -பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கட்சியினர் மேற்கொள்ளும் பிரசாரத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறை, வேட்பாளர் பயன்படுத்தும் வாகனம் மற்றும் ஒலி-பெருக்கி அனுமதி பெறுதல், வாக்குசாவடியில் பின்பற்ற வேண்-டியவை, கூட்டத்தில் கட்சி சம்பந்தமான படம், நோட்டீஸ் கொடுக்க கூடாது. கட்சி கொடிகளை நீக்க வேண்டும். சுவர் விளம்பரங்களை அழிப்பது குறித்து விளக்கம் தரப்பட்டது. தொகுதி தேர்தல் பணி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
* தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில், தபால் வாக்கு குறித்து, அலுவலர்களுக்கு நேற்று ஆலோசனை வழங்கப்பட்டது. ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தார்.
தபால் வாக்குகளை பதிவு செய்வது தொடர்பான விளக்கம் மற்றும் விதிமுறை குறித்து, வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தாசில்தார் ராமலிங்கம், தேர்தல் தொடர்பான அலுவலர்கள் பங்-கேற்றனர்.

