/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கிருஷ்ணராக மோடி: அர்ஜுனராக பழனிசாமி' பொள்ளாச்சி ஜெயராமன் வர்ணனை
/
'கிருஷ்ணராக மோடி: அர்ஜுனராக பழனிசாமி' பொள்ளாச்சி ஜெயராமன் வர்ணனை
'கிருஷ்ணராக மோடி: அர்ஜுனராக பழனிசாமி' பொள்ளாச்சி ஜெயராமன் வர்ணனை
'கிருஷ்ணராக மோடி: அர்ஜுனராக பழனிசாமி' பொள்ளாச்சி ஜெயராமன் வர்ணனை
ADDED : மார் 18, 2026 06:08 AM

திருப்பூர்: ''நம் படையை வழி நடத்துகிற, பிரதமர் மோடி கிருஷ்ணராக முன் நின்று செயல்பட்டு கொண்டிருக்கிறார். தேர்தல் களத்தில் விளையாட வில் வித்தையில் சிறந்தவரான அர்ஜுனராக, பழனிசாமி இருக்கிறார்,'' என பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி, திருப்பூர் மாநகர் மாவட்டஅ.தி.மு.க. சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்பதை, ஒரு ஸ்டாலின் அல்ல, ஒரு கோடி ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது.
ஒரு அமாவாசை முடிந்து, பவுர்ணமி வந்தால், முதல்வராக பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். அவரை முதல்வர் என்ற சிம்மாசனத்தில் அமர வைக்க, நமக்கு துணையாக, நம் படையை வழி நடத்துகின்ற, பிரதமர் மோடி கிருஷ்ணராக முன் நின்று செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
தேர்தல் களத்தில் விளையாட வில் வித்தையில் சிறந்தவரான அர்ஜுனராக, பழனிசாமி இருக்கிறார். ஒவ்வொரு ஓட்டும், தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு வைக்க கூடிய வேட்டாக இருக்க வேண்டும். தோழமை கட்சிகள், நாம் என்றென்றும் ஒற்றுமையாக இருந்து களத்தில் வெற்றியை பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

