sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தேர்தலில் தி.மு.க.,வை புறக்கணிப்போம் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் முடிவு

/

 தேர்தலில் தி.மு.க.,வை புறக்கணிப்போம் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் முடிவு

 தேர்தலில் தி.மு.க.,வை புறக்கணிப்போம் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் முடிவு

 தேர்தலில் தி.மு.க.,வை புறக்கணிப்போம் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் முடிவு


ADDED : மார் 18, 2026 06:04 AM

Google News

ADDED : மார் 18, 2026 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், விவசாயிகளுக்காக மட்டும் மொத்தம் 83 வாக்குறுதிகளை அளித்த தி.மு.க., வெறும் 10 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியது. விவசாயிகளின் சம்மதம் இன்றி, ஒரு சதுர அடி நிலத்தை கூட எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு, மாவட்டத்துக்கு ஒரு தொழிற்பேட்டை என, 60 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை அபகரிக்க தி.மு.க., அரசு திட்டமிட்டது.

இனாம் நிலங்களை பூஜ்ஜிய மதிப்பு செய்து விட்டு, விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தியது. அறவழியில் போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. மானிய திட்டங்கள் என்ற பெயரில், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியை திருடி ஊழல் செய்தது. கள் விற்பனைக்கான தடையை நீக்கவே இல்லை; விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கவில்லை; நீர்ப்பாசன திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகவே உள்ளன.

எனவே, அனைத்து விவசாயிகளையும் ஓரணியில் திரட்டி, தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us