/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்கத்தினர் ஆலோசனை
/
முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்கத்தினர் ஆலோசனை
ADDED : அக் 27, 2025 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க கூட்டம், லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் நாயப் சுபேதார் நடராஜ் வரவேற்றார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கர்னல் நாகராஜ், சித்ரா ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு புதிய சீருடை தேர்வு செய்தல், சட்ட ஆலோசனைகள், ஓய்வூதியம் குறித்த பணப் பயன்களை பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

