/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சங்கங்களுக்கு அழைப்பில்லை நுகர்வோர் அமைப்பு ஆதங்கம்
/
சங்கங்களுக்கு அழைப்பில்லை நுகர்வோர் அமைப்பு ஆதங்கம்
சங்கங்களுக்கு அழைப்பில்லை நுகர்வோர் அமைப்பு ஆதங்கம்
சங்கங்களுக்கு அழைப்பில்லை நுகர்வோர் அமைப்பு ஆதங்கம்
ADDED : ஏப் 09, 2025 07:10 AM
திருப்பூர் : 'திருப்பூர் மாநகராட்சி தொடர்புடைய நுகர்வோர் குறைகேட்பு கூட்டங்களில், பதிவு பெற்ற நுகர்வோர் சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்' என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா கூறியதாவது:
நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் பதிவுகள், திருப்பூர் மாவட்ட பதிவுத்துறை பதிவுகளுக்கு உட்பட்டது. நடப்பாண்டு, எத்தனை நுகர்வோர் சங்கங்கள், முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை, மாவட்ட பதிவுத்துறை வெளியிட வேண்டும்.
மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்படும் குறைகேட்பு கூட்டங்களில் பங்கேற்க, நுகர்வோர் அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
அதே நேரம், திருப்பூர் மாநகராட்சி வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க, மாநகராட்சி எல்லைக்குள் உள்ள நுகர்வோர் சங்கங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பிற பகுதிகளில் உள்ள சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.