/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மார்க்கெட் கடை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தல்
/
மார்க்கெட் கடை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தல்
மார்க்கெட் கடை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தல்
மார்க்கெட் கடை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2025 11:26 PM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட் வளாகம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.
இதில், உள்ள கடைகளை ஏலம் விடுவது வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி முறையாக அறிவிப்பு வெளியிட்டு, பொது ஏலம் நடத்த வேண்டும்.
அதிக தொகைக்கு ஏலம் கோரும் நபருக்கு கடை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம் நேற்று திருப்பூர் கன்ஸ்யூமர் அவேர்னஸ் விங் தலைவர் ராமகிருஷ்ணன், நல்லுார் நுகர்வோர் நல மன்றம் தலைவர் சண்முகசுந்தரம், பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பேர் அசோசியேசன் தலைவர் கிருஷ்ணசாமி, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு சிந்து சுப்பிரமணியம், கன்ஸ்யூமர் அவேர்னஸ் விங் துணை தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர்கள் ரவி, ராதாகிருஷ்ணன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை விடுத்தனர்.
அந்த மனுவில், 'திருப்பூர் மாநகராட்சி கட்டடங்களை குறைந்த வாடகைக்கு ஏலம் எடுத்து அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய மார்க்கெட்டில் சிலர் கடைகளை பிடித்து உள் வாடகைக்கு விடுவதாக கூறி வியாபாரிகளிடம் பணம் வசூலிக்கின்றனர். பழைய வியாபாரிகள் கேட்கும் கடையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதிப் பற்றாக்குறையால் தடுமாறும் மாநகராட்சிக்கு இது மேலும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். மாநகராட்சிக்கு நிலுவை வைத்துள்ளோர் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. மாநகராட்சி மன்ற கூட்டங்களுக்கு நுகர்வோர் அமைப்புகளை அழைக்க வேண்டும்,' தெரிவிக்கப்பட்டுள்ளது.

