/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலை பராமரிப்பில் அரசை ஏமாற்றும் அதிகாரிகள்; நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் குற்றச்சாட்டு
/
நெடுஞ்சாலை பராமரிப்பில் அரசை ஏமாற்றும் அதிகாரிகள்; நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் குற்றச்சாட்டு
நெடுஞ்சாலை பராமரிப்பில் அரசை ஏமாற்றும் அதிகாரிகள்; நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் குற்றச்சாட்டு
நெடுஞ்சாலை பராமரிப்பில் அரசை ஏமாற்றும் அதிகாரிகள்; நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் குற்றச்சாட்டு
ADDED : ஜன 09, 2025 11:34 PM
திருப்பூர்; திருப்பூரில் நெடுஞ்சாலை, நகர சாலைகள் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணி துவங்கப்படாமல் இருப்பது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் அவிநாசி ரோடு, பல்லடம், காங்கயம் ரோடு என, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை என்ற அந்துஸ்து பெற்ற சாலைகளின் பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி, பல்லாங்குழி சாலைகளாக மாறி வருகின்றன. 'சாலையை செப்பனிட வேண்டும்' என, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் என, பலரும் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த மாதம், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த, சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கூட, இதுகுறித்து நுகர்வோர் அமைப்பினர் குரல் எழுப்பினர். அடுத்த கூட்டம் நடப்பதற்குள் பல்லாங்குழி ரோடுகள் சீரமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க, கடந்த மாதம், 19ம் தேதி துணை முதல்வர் உதயநிதி, திருப்பூர் வந்தார். இதையடுத்து, அவர் செல்லும் சாலைகள் 'பேட்ஜ்' வேலை செய்யப்பட்டு, 'பளிச்' என்று ஆக்கப்பட்டன.
இது குறித்த, நல்லுார் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவரும், மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினருமான சண்முகசுந்தரம் கூறியதாவது:
திருப்பூரில் தேசிய, மாநில மற்றும் மாநகராட்சி சாலைகள் பல இடங்கள் சேதமடைந்தும், குண்டும், குழியுமாக இருக்கிறது என, தொடர்ந்து கூறி வருகிறோம்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தினோம். ஆனால், 'பேட்ச்' வேலை உள்ளிட்ட பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. துணை முதல்வர் வர இருக்கிறார் என்பதற்காக சாலைகளில் உள்ள குழிகள், இரவோடு இரவாக 'பேட்ச்' வேலை செய்யப்பட்டு மூடப்பட்டன.
அவர் மாற்று வழியில் வருகிறார் என, தெரிந்தால், உடனடியாக அந்த சாலையில் உள்ள குழிகளில் மண் நிரப்பி, அவரது வாகனம் குலுங்காத வகையில் தயார்படுத்தி விடுகின்றனர்.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரேனும் ஊருக்குள் வந்தால் தான் இதுபோன்ற பணிகள் நடக்கும் என்றால் அவர்கள் அனைத்து வீதிகளுக்கும் வர வேண்டும். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என, அதிகாரமட்டத்தில் உள்ளவர்களை திருப்திப்படுத்த, அவசர கதியில் இத்தகைய பணிகளை செய்வது, அரசை ஏமாற்றும் செயலாகும். அதிகாரமட்டத்தில் உள்ளவர்களை திருப்திப்படுத்துவதை தவிர்த்து, மக்களுக்காக பணியாற்றும் நிலை வர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

