/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடரும் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
/
தொடரும் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 18, 2024 06:32 AM
திருப்பூர் ; திருப்பூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்வதால், விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 10.92 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக, அமராவதி அணையில், 66 மி.மீ.,க்கு கன மழை பெய்துள்ளது. நல்லதங்காள் ஓடையில், 25 மி.மீ.,க்கு மிதமான மழையும்; மடத்துக்குளத்தில், 15 மி.மீ., - கலெக்டர் முகாம் அலுவலக சுற்றுப்பகுதிகளில் 14.40; தாராபுரத்தில், 11;திருமூர்த்தி அணையில், 10; கலெக்டர் அலுவலக பகுதிகளில், 9; காங்கயத்தில், 9; திருமூர்த்தி அணை (ஐ.பி.,) 8; திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதிகளில் 7; பல்லடத்தில், 7; உப்பாறு அணையில், 6; வட்டமலைக்கரை ஓடையில், 5.60; ஊத்துக்குளியில் 5.20; குண்டடத்தில் 5; உடுமலையில், 4.20; அவிநாசியில், 4; மூலனுாரில், 3; வெள்ள கோவிலில், 3; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதிகளில் 1 மி.மீ.,க்கு லேசான மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில், கடந்த அக்., 1ம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்தது. தீபாவளி வரை தொடர்ந்து பெய்த மழை, பண்டிகைக்குப்பின் பத்து நாட்களுக்கு மேல் ஓய்வெடுத்தது. இந்நிலையில், இம்மாதம் 13ம் தேதி முதல் அடுத்தடுத்த நாட்கள், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
பிரதான அணைகளான அமராவதியில், மொத்தம் 90 அடியில், 86.13 அடிக்கு நீர் மட்டம் உள்ளது; திருமூர்த்தியில், 60 அடியில், 51.13 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்வு, நிலத்தடி நீர்மட்டம் உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.