/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னை சாகுபடியில் தொடர் வருவாய் இழப்பு ஊடுபயிருக்கு வழிகாட்டுதல் தேவை
/
தென்னை சாகுபடியில் தொடர் வருவாய் இழப்பு ஊடுபயிருக்கு வழிகாட்டுதல் தேவை
தென்னை சாகுபடியில் தொடர் வருவாய் இழப்பு ஊடுபயிருக்கு வழிகாட்டுதல் தேவை
தென்னை சாகுபடியில் தொடர் வருவாய் இழப்பு ஊடுபயிருக்கு வழிகாட்டுதல் தேவை
ADDED : நவ 22, 2024 10:54 PM
உடுமலை: தென்னையில் வருவாய் இழப்பை சரி செய்யும் வகையில், ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. பல லட்சம் தென்னை மரங்கள், நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, நோய்த்தாக்குதலால் காய்ப்புத்திறன் இழந்து விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு தொடர்கதையாகியுள்ளது. தற்போது, கொப்பரை மற்றும் தேங்காய் விலை உயர்ந்தும், தேங்காய் உற்பத்தி இல்லாமல் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையை சீராக்க தென்னந்தோப்புகளில், ஊடுபயிர் சாகுபடி செய்து, வருவாய் இழப்பை தவிர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், போதிய வழிகாட்டுதல் இல்லாததால், திணறி வருகின்றனர்.
உடுமலை, பொள்ளாச்சி பகுதியில், முன்பு, கொச்சின் வாசனை திரவியங்கள் வாரியம் (ஸ்பைசஸ் போர்டு) சார்பில், தென்னையில், ஊடுபயிராக, வெனிலா சாகுபடி செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
'வெனிலா பீன்ஸ்' எனப்படும் இவ்வகை பீன்ஸ்கள் வாசனைப்பொருளாக வெளிநாடுகளில் பயன்படுத்துப்படுகிறது.
ஐஸ்கிரீம், புரதப்பொருட்கள் தயாரிப்பில், வாசனைக்காக வெனிலா பயன்படுகிறது. மிதமான தட்பவெப்ப நிலை நிலவும் பொள்ளாச்சி, உடுமலை பகுதி விவசாயிகள் இதை பயிரிட அதிக ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில், விலை வீழ்ச்சி மற்றும் தொடர் வழிகாட்டுதல் இல்லாததால், இச்சாகுபடியில் ஈடுபட தயக்கம் காட்டினர்.
விவசாயிகள் கூறியதாவது: உடுமலை பகுதியில், பரிசோதனை அடிப்படையில், சிலர் வெனிலா சாகுபடி செய்தனர். தென்னை மரங்களுக்கிடையே ஊடுபயிராக வெனிலா பயிரிட, முதலில் குறிப்பிட்ட இடைவெளியில் கொடியை தாங்கும், தாங்கு மரங்களை பயிர் செய்ய வேண்டும்.
இவ்வகை மரங்கள் 'கிளைசெரிடியா' என அழைக்கப்படுகிறது. மரங்கள் ஆறு மாதத்தில் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்தவுடன் வெனிலா கொடிகளை பயிரிட வேண்டும். அறுவடையை துவக்க மூன்று ஆண்டுகளானது. இவ்வாறு, வெனிலா சாகுபடியை முயற்சித்த நிலையில், சந்தை வாய்ப்புகள் இல்லாதது, விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால், வெனிலா சாகுபடியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
தற்போது, அரசு, சாகுபடிக்கு வழிகாட்டுதல் வழங்கி, நேரடியாக வெனிலா கொள்முதல் செய்தால், தென்னை விவசாயிகள் பாதிப்பிலிருந்து மீள்வார்கள். பிற ஊடுபயிர் சாகுபடிக்கும் வழிகாட்டுதல் தேவையாகும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.