/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடர் மழை; ஊர்ந்து சென்ற வாகனங்கள்
/
தொடர் மழை; ஊர்ந்து சென்ற வாகனங்கள்
ADDED : அக் 14, 2024 11:58 PM

திருப்பூர் : திருப்பூரில் நேற்று பிற்பகல் வாக்கில் துவங்கிய சாரல் மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த வண்ணம் இருந்தது.
திருப்பூர் நகரப் பகுதியில் நேற்று மாலை 4:00 மணி வாக்கில் லேசான சாரல் விழத் துவங்கியது. இந்த சாரல் மழை தொடர்ந்து இடைவிடாது துாறிய வண்ணம்இருந்தது. இதனால், நேற்று மாலை பள்ளி, கல்லுாரி சென்றுதிரும்பிய மாணவர்கள் வீடு திரும்ப சற்று சிரமப்பட்டனர்.
மேலும் மாலை நேரமும் தொடர்ந்து மழை துாறியபடி இருந்த நிலையில், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வீடு திரும்பியோரும் மழையில்நனைந்தபடியேசென்றனர். முன்ெனச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி குடை, ரெயின் கோட் மற்றும் ஜெர்கின் போன்றவற்றை எடுத்துச் சென்றவர்கள் அதைப் பயன்படுத்தியபடி சென்றனர்.
பெரும்பாலும் பலரும் மழையில் நனைந்தபடி சென்றனர்.இந்த சாரல் மழை இரவு 8:00 மணி வாக்கில் சற்று பலமான துாறலாகமாறி தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த படி இருந்தது.
மாலை முதல் தொடர்ந்து மழை பெய்த நிலையில் ரோட்டில் சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன. ரோடுகள், ரோட்டோர பள்ளங்கள் ஆகியவற்றில் மழை நீர் பாய்ந்து சென்றது.
மாலை நேர ரோட்டோரக் கடைகள் மற்றும் தள்ளு வண்டிகள் இந்த மழை காரணமாக குறிப்பிட்ட அளவு காணமுடியவில்லை. கடை வைக்க வந்த ஒரு சிலரும் மழை காரணமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியவில்லை.
நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகம் இருந்தது. இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.