/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் டி.எஸ்.பி., வாகனத்தில் சர்ச்சை
/
கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் டி.எஸ்.பி., வாகனத்தில் சர்ச்சை
கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் டி.எஸ்.பி., வாகனத்தில் சர்ச்சை
கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் டி.எஸ்.பி., வாகனத்தில் சர்ச்சை
ADDED : ஜூன் 15, 2025 04:02 AM

பல்லடம்: கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கருடன் உலா வரும் டி.எஸ்.பி., வாகனத்தால், பல்லடத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
'சன் கன்ட்ரோல் பிலிம்' எனப்படும் கருப்பு ஸ்டிக்கர்களை கார் கண்ணாடிகளில் ஒட்டப்படுவதால், அதிகப்படியான குற்றச்சாட்டுகள் நடப்பதாக கடந்த காலத்தில் புகார் எழுந்தது.
கார் கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட, 2012ல் சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இருப்பினும், சிலர் தடையை மீறி கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உலா வருகின்றனர்.
இது சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறும் செயல். இவ்வாறு விதிமுறை இருக்க, பல்லடம் டி.எஸ்.பி., பயன்படுத்தி வரும் ஜீப் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. போலீஸ் வாகனத்திலேயே இவ்வாறு இருப்பது கேள்வியை எழுப்பி வருகிறது.
போலீசாரிடம் கேட்டதற்கு, 'ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ஜீப்தான் பல்லடம் டி.எஸ்.பி.,க்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜீப் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்து,' என சமாளித்தனர்.