/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாடுவதில் சர்ச்சை
/
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாடுவதில் சர்ச்சை
ADDED : பிப் 06, 2025 10:58 PM

திருப்பூர்; கே.எஸ்.சி., பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பாக, சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நுாற்றாண்டு விழாவை கொண்டாட முன்னாள் மாணவர்கள் முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
கடந்த, 1918ல் துவங்கப்பட்ட, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் செயல்படும், கே.எஸ்.சி., பள்ளியின் நுாற்றாண்டு விழா, 2017ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு இடத்தை தானமாக வழங்கிய சுப்பிரமணியம் செட்டியாருக்கு மார்பளவு சிலையும் வைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் இப்பள்ளியில் நுாற்றாண்டு விழா நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு, முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பணம் வசூலித்து வருகின்றனர். மீண்டும் விழா கொண்டாடுவது ஏன் என தெளிவுபடுத்தவேண்டும். தற்போதைய கொண்டாட்டத்தின்போது, பள்ளி இடத்தை தானமாக வழங்கிய சுப்பிரமணியம் செட்டியாரின் சிலையை அகற்ற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த சிலையை அகற்றினால், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

