sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தனியார் 'பார்' இல்லையாம் ஆர்.டி.ஐ., பதிலால் சர்ச்சை

/

தனியார் 'பார்' இல்லையாம் ஆர்.டி.ஐ., பதிலால் சர்ச்சை

தனியார் 'பார்' இல்லையாம் ஆர்.டி.ஐ., பதிலால் சர்ச்சை

தனியார் 'பார்' இல்லையாம் ஆர்.டி.ஐ., பதிலால் சர்ச்சை


ADDED : ஜன 04, 2024 12:11 AM

Google News

ADDED : ஜன 04, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம், : பல்லடம் வட்டார பகுதியில் தனியார் மதுபான 'பார்'களே இல்லை என, ஆர்.டி.ஐ., பதில் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:

பல்லடம் வட்டார பகுதியில் தனியார் பார்களின் எண்ணிக்கை மற்றும் முகவரி, 'பார்'களில், உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படுகிறதா அல்லது பொது மக்களுக்கும் வழங்கப்படுகிறதா, தனியார் பார்களுக்கு, எதன் அடிப்படையில் மதுபானங்கள் வழங்கப்படுகிறது என்ற தகவல்களை கேட்டு ஆர்.டி.ஐ.,-ல் விண்ணப்பித்திருந்தேன்.

இதற்கு, பல்லடம் வட்டார பகுதியில் தனியார் மதுபான பார்கள் எதுவும் இல்லை. தனியார் பார்களில், உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படுகிறது என்ற பதில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல்லடத்தில், 7 தனியார் மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பார்களே இல்லை என்று கூறிவிட்டு, உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படுவதாக குழப்பமான பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us