/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் ரேக்ளா போட்டி பல்லடத்தில் எழுந்த சர்ச்சை!
/
ரோட்டில் ரேக்ளா போட்டி பல்லடத்தில் எழுந்த சர்ச்சை!
ரோட்டில் ரேக்ளா போட்டி பல்லடத்தில் எழுந்த சர்ச்சை!
ரோட்டில் ரேக்ளா போட்டி பல்லடத்தில் எழுந்த சர்ச்சை!
ADDED : மார் 18, 2025 04:37 AM

பல்லடம்: பல்லடத்தில், போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலையில், ரேக்ளா போட்டி நடத்த போலீசார் அனுமதி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்லடம் நகர தி.மு.க., சார்பில், நேற்று முன்தினம் ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 400 ரேக்ளா வண்டிகள் வரவழைக்கப்பட்டன.
பொள்ளாச்சி செல்லும் பழைய பைபாஸ் ரோட்டில் போட்டி நடத்தப்பட்டது. இதனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என, இரண்டு நாட்கள், பழைய பைபாஸ் ரோடு மூடப்பட்டது. ஆளுங்கட்சி நடத்தும் ரேக்ளா போட்டிக்கு நெடுஞ்சாலையில் அனுமதி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சமீபத்தில், கோவில் விழாவை முன்னிட்டு, கலை நிகழ்ச்சி மற்றும் இசைக்கச்சேரி நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால், மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், ஒரு வாரம் காலம் கடத்தி அனுமதி மறுத்தனர். போக்குவரத்துக்கு இடையூறின்றி, இரவு நேரத்தில் நடத்த திட்டமிட்டிருந்த கலை நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இவ்வாறு கோவில் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த போலீசார், ஆளுங்கட்சி நடத்தும் ரேக்ளா போட்டிக்கு மட்டும், அனுமதி வழங்கியுள்ளனர்.
எனவே, ஆளுங்கட்சி நெருக்கடியால், போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர்,' என்றனர்.