/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமையல் எரிவாயு விழிப்புணர்வு முகாம்
/
சமையல் எரிவாயு விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 22, 2025 05:34 AM

உடுமலை: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்களுக்கு, சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
-உடுமலை ஒன்றியம், குறுஞ்சேரி ஊராட்சி அலுவலக வளாகத்தில், பாரத் பெட்ரோலிய நிறுவனம் மற்றும் உடுமலை செல்வி காஸ் ஏஜென்சி சார்பில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்களுக்கு, கிராம விழிப்புணர்வு திட்டத்தின் கீழ், எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முன்னாள் ஊராட்சித்தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
செல்வி காஸ் உரிமையாளர் அய்யப்பன், 'காஸ் எரிவாயு பயன்படுத்தும் முறைகள், சிக்கனமாக பயன்படுத்துவது, காஸ் டியூப்களை, 5 ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியதன் அவசியம், காஸ் கசிவு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, காஸ் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

