/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் கட்டப்படுமா?
/
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் கட்டப்படுமா?
ADDED : நவ 22, 2025 05:34 AM
உடுமலை: உடுமலை கொழுமம் ரோட்டில், மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - ராமேஸ்வரம், பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், உடுமலை - பழநி பாதையில் உள்ள, கொழுமம் ரயில்வே கேட் ரயில் செல்வதற்காக தினமும் பல முறை மூடப்படுகிறது. கேட் திறந்தவுடன், வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும் போக்குவரத்து நெரிசலும் உருவாகிறது. எனவே, அந்த ரோட்டில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

