'வார்டு ஒருங்கிணைப்பாளருக்கு ஒத்துழைப்பு அவசியம்'
'வார்டு ஒருங்கிணைப்பாளருக்கு ஒத்துழைப்பு அவசியம்'
ADDED : ஜூன் 14, 2026 09:07 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி வார்டு ஒருங்கிணைப்பாளர்களின் பணிகள் குறித்த 2-வது ஆய்வுக் கூட்டம் டவுன்ஹாலில் கமிஷனர் அமித் தலைமையில் நடந்தது. துணை கமிஷனர் சுந்தரராஜன், மாநகர் நல அலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டசபை தேர்தலுக்குப் பின், திடக்கழிவு மேலாண்மை புகார்களைத் தீர்க்க வார்டுதோறும் ஒரு பொறுப்பு அலுவலர் (ஒருங்கிணைப்பாளர்) நியமிக்கப்பட்டார்.
இவர்கள் தினமும் காலை 7:00 முதல் 10:00 மணி வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
குப்பை அகற்றுதல், குடிநீர் வினியோகம், சாக்கடை சுத்தம் செய்தல், தெருவிளக்கு, ரோடு சேதம் போன்ற அடிப்படைப் பிரச்னைகளை நேரில் பார்த்து, மக்கள் குறைகளைக் கேட்டு கமிஷனருக்குத் தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் தங்களின் வாராந்திர அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
அப்போது பேசிய கமிஷனர் அமித், அனைத்துத்துறை அதிகாரிகளும் வார்டு ஒருங்கிணைப் பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து, அவர்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடி க்கை எடுக்க வேண்டும்; பெரிய திட்டப் பணிகள் இருந்தால் உடனடியாக மேலதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.
