/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 141.09க்கு விற்பனை
/
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 141.09க்கு விற்பனை
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 141.09க்கு விற்பனை
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 141.09க்கு விற்பனை
ADDED : ஜன 02, 2025 10:11 PM

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, எஸ்.வி.,மில், நல்லி கவுண்டம்பாளையம், விளாமரத்துப்பட்டி, சீலக்காம்பட்டி, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 21 விவசாயிகள், 64 மூட்டை அளவுள்ள, 3 ஆயிரத்து, 200 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 7 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ. 136.99 முதல், ரூ. 141.09 வரையும், இரண்டாம் தரம், ரூ. 115.09 முதல், 130.21 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது என, ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
பெதப்பம்பட்டி
திருப்பூர் மாவட்ட விற்பனை குழுவின் கீழ் பெதப்பம்பட்டியில், ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விவசாயிகளின் கொப்பரை, இ-நாம் திட்டத்தின் கீழ் ஏலம் விடப்படுகிறது. கடந்த ஏலத்தில், ரூ.10 லட்சம் மதிப்பிலான 100 குவிண்டால் கொப்பரை, இ-நாம் திட்டத்தின் கீழ், மின்னனு முறையில் ஏலமிடப்பட்டது.
கடந்தாண்டு, ஏப்., முதல் டிச., மாதம் வரை, 9.13 லட்ச ரூபாய் மதிப்பிலான 730 குவிண்டால் தேங்காய், 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான 1822.57 குவிண்டால் தேங்காய் பருப்பு; 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1374.84 குவிண்டால் மக்காச்சோளம், 5.42 லட்ச ரூபாய் மதிப்பிலான 361.18 குவிண்டால் காய்கறிகள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, திருப்பூர் மாவட்ட விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ் தெரிவித்தார்.