/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 144.50க்கு விற்பனை
/
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 144.50க்கு விற்பனை
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 144.50க்கு விற்பனை
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 144.50க்கு விற்பனை
ADDED : பிப் 06, 2025 09:42 PM

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ ரூ.144.50 க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, எலையமுத்துார், விளாமரத்துப்பட்டி, புக்குளம், சின்னாம்பாளையம், சீலக்காம்பட்டி, பூளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 10 விவசாயிகள், 38 மூட்டை அளவுள்ள, ஆயிரத்து, 900 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 7 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ. 138 முதல், ரூ. 144.50 வரையும், இரண்டாம் தரம், ரூ. 110.99 முதல், 133.99 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
அதே போல், ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த, இரண்டு விவசாயிகளின், 395 மூட்டை அளவுள்ள, 19,750 கிலோ தேங்காய் பருப்பு, இ-நாம் திட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டது என, ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.