ADDED : ஜூன் 05, 2025 11:59 PM
உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, எஸ்.வி.,மில், கப்பளாங்கரை, எலையமுத்துார், எரிசனம்பட்டி, விளாமரத்துப்பட்டி, குமரலிங்கம், புக்குளம், ஆலாம்பாளையம், கோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 19 விவசாயிகள், 120 மூட்டை அளவுள்ள, 6 ஆயிரம் கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இத்திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், ஐந்து நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.190 முதல், ரூ. 205 வரையும், இரண்டாம் தரம், ரூ. 140.66 முதல், ரூ. 190. 66 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது என, திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.