ADDED : நவ 06, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 'இ-நாம்' திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் விடப்பட்டது. ஏலத்தில், 27 விவசாயிகள்; 9 வியாபாரிகள் பங்கேற்றனர். 83 மூட்டைகள் ஏலம் விடப்பட்டது.
கொப்பரை முதல் தரம் குறைந்தபட்சமாக கிலோவுக்கு, 203 ரூபாயும், அதிகபட்சமாக, 224 ரூபாய்க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம் கிலோ ரூ. 132.14 முதல் 198 ரூபாய் வரை விற்பனையானது. வாரந்தோறும் நடைபெறும் ஏலம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, விற்பனை கூட கண்காணிப்பாளரை, 94439 62834 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

