/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., நிகழ்ச்சி; தவித்த மக்கள் : கண்டுகொள்ளாத போலீஸ்
/
தி.மு.க., நிகழ்ச்சி; தவித்த மக்கள் : கண்டுகொள்ளாத போலீஸ்
தி.மு.க., நிகழ்ச்சி; தவித்த மக்கள் : கண்டுகொள்ளாத போலீஸ்
தி.மு.க., நிகழ்ச்சி; தவித்த மக்கள் : கண்டுகொள்ளாத போலீஸ்
ADDED : நவ 06, 2025 11:14 PM

உடுமலை: நகர பிரதான ரோட்டில் தி.மு.க., வினர் நடத்திய நிகழ்ச்சியால், பல மணி நேரம் போக்குவரத்து பாதித்து மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்; போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடுமலை நகரின் பிரதான ரோடாக தளி ரோடு அமைந்துள்ளது. தி.மு.க., சார்பில், கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாமிநாதன் மற்றும் இதர நிர்வாகிகள், தலைவர்களின் உருவப்படத்துக்கு, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி முன்பு, பஸ் ஸ்டாண்ட் அருகில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிறகு நிகழ்ச்சி தளி ரோட்டிலுள்ள நகராட்சி அலுவலகம் முன் நடைபெறும் என தி.மு.க., நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, 8:00 மணி முதலே தளி ரோட்டில் திரண்டனர்.
அந்த ரோட்டில், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து, நகருக்குள் இந்த ரோடு வழியாகவே அனைத்து வாகனங்களும் வர வேண்டும்.
தி.மு.க., வினர், தங்களது வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தியதால், அனைத்து தரப்பினரும் பாதித்தனர்.
நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்காத நிலையில், காலை, 10:30 மணிக்கு மேல், நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று, போக்குவரத்து ஸ்தம்பித்தது. தி.மு.க., வினர் போக்குவரத்து இடையூறு செய்ய வேண்டாம் என, மைக்கில் தொடர்ந்து அறிவித்தாலும் எவ்வித பலனும் இல்லை.
மேம்பாலம் வழியாக வந்த வாகனங்களும், நெரிசலில் சிக்கித்தவித்தன. ஆளுங்கட்சி நிகழ்ச்சி என்பதால், போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. பல மணி நேரத்துக்கு பிறகே தளி ரோட்டில் நெரிசல் சீரானது.
அதிகம் பேர் திரளும் இத்தகைய கட்சி நிகழ்ச்சிக்கு பிரதான ரோட்டில், உடுமலை போலீசார் அனுமதி வழங்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் எஸ்.பி.,க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

