/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி குப்பை விவகாரம்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
/
மாநகராட்சி குப்பை விவகாரம்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மாநகராட்சி குப்பை விவகாரம்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மாநகராட்சி குப்பை விவகாரம்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ADDED : நவ 08, 2025 12:59 AM
பல்லடம்: திருப்பூர் அருகே, இடுவாய் கிராமத்தில், மாநகராட்சி குப்பைகள் கொட்டுவதற்கு எதிராக, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. விவசாயிகள், பொதுமக்கள் சார்பிலும், எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. விசாரித்தகோர்ட், அடுத்த வாரத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
சின்னக்காளிபாளையம் கிராமத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
மக்கள் போராட்டத்தை எதிர்த்து, மாநகராட்சி நிர்வாகம், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இன்றைய (நேற்று) வழக்கு விசாரணையில், சின்னக்காளிபாளையம் கிராமத்தில் குப்பை கொட்டியே தீருவோம் என்ற நோக்கத்தில், வாதிடப்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள் தரப்பிலான விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.
விவசாயம், கால்நடை தொழிலை பாதிக்கும் இப்பிரச்னையில், விவசாயிகளுக்கு ஆதரவாக கோர்ட் உத்தரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கிடையே, அடுத்த கட்ட மக்கள் போராட்டம் குறித்தும் பொதுமக்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

