/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏலம் விடப்பட்ட கடைகளுக்கு மின் கட்டணம் செலுத்தும் மாநகராட்சி
/
ஏலம் விடப்பட்ட கடைகளுக்கு மின் கட்டணம் செலுத்தும் மாநகராட்சி
ஏலம் விடப்பட்ட கடைகளுக்கு மின் கட்டணம் செலுத்தும் மாநகராட்சி
ஏலம் விடப்பட்ட கடைகளுக்கு மின் கட்டணம் செலுத்தும் மாநகராட்சி
ADDED : செப் 20, 2024 10:54 PM
திருப்பூர்: ஏலம் விடப்பட்ட கடைகளுக்கான மின் கட்டணத்தை, தனியாருக்கு பதில், ஓராண்டுக்கும் மேலாக திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமே செலுத்தி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அனுப்பர்பாளையம் அருகே வெங்கமேட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு கடைகள் உள்ளன.
தனியார் ஏலம் எடுத்து, ஒரு கடையில் உணவகம் மற்றொரு கடையில் ஜெராக்ஸ் சென்டர் நடத்தி வருகின்றனர். இரு கடைக்கும், ஓராண்டுக்கும் மேலாக மாநகராட்சி நிர்வாகமே மின் கட்டணம் செலுத்திய விஷயம், வெளியே கசிந்துள்ளது.
இது குறித்து, மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு மாநில இணை பொதுச்செயலாளர் சரவணன், மின்வாரிய இணையதளத்தில் இது குறித்து பரிசோதித்துள்ளார். அதில், இரு கடைக்கு, 2023, ஏப்., மாதம் முதல், மாநகராட்சி நிர்வாகமே செலுத்தும் வகையில் மடைமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
உணவகம் (03181 004135) மற்றும் ஜெராக்ஸ் சென்டர் (03181004135) ஆகிய இரண்டு மின் இணைப்புக்கு, 2023, ஏப்., முதல் கடந்த செப்., வரை மின் கட்டண தொகையை, மாநகராட்சி நிர்வாகம் செலுத்தியுள்ளது.
இந்த முறைகேடு குறித்து சரவணன், தமிழக முதல்வர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மின்வா ரிய மேற்பார்வை பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பிய புகார் மனுவில், 'இந்த மோசடியால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய அலுவலர்கள், தனியார் உள்பட முறைகேட்டில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.