sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சலுகை விலையில் பஞ்சு விற்பனை; தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

/

சலுகை விலையில் பஞ்சு விற்பனை; தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

சலுகை விலையில் பஞ்சு விற்பனை; தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

சலுகை விலையில் பஞ்சு விற்பனை; தொழில்துறையினர் எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 07, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; இந்திய பருத்திக்கழகம் (சி.சி.ஐ.,) என்ற அரசு அமைப்பு, விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.

பஞ்சு என்பது, அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, யார் வேண்டுமானாலும் பஞ்சு வர்த்தகம் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டது.

பெரும் நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக பருத்தியை வாங்கி பதுக்கி வைத்தன. நுாற்பாலைகளுக்கு பஞ்சு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் போது, இருப்பு வைத்த பஞ்சை, பலமடங்கு அதிக விலைக்கு விற்று, கொள்ளைலாபம் ஈட்டும் செயலும் நடந்து வந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பஞ்சுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்படவில்லை. சீரான பஞ்சு வரத்தும், நுகர்வும் இருந்ததால் விலையிலும், பெரிய அளவு மாற்றம் ஏற்படவில்லை. தற்போதைய விலை நிலவரப்படி, இந்தியாவில் தரமான பஞ்சு, ஒரு கேண்டி (356 கிலோ), 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில், 10 சதவீதம் அளவுக்கு, பஞ்சு விலை அதிகம். இதனால், இந்திய பஞ்சு ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லை.

அதேநேரம், உள்நாட்டில் பஞ்சு மகசூல் குறைந்துவிட்டதால், நம் தேவைக்கே, வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை காட்டிலும் வெளியே விலை குறைவு என்பதால், 11 சதவீத வரியுடன் இறக்குமதி செய்தாலும் தொழிலை நகர்த்த முடியும்.

இருப்பினும், விவசாயிகளிடம் இருந்து, இந்திய பருத்திக்கழகம் கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ள பஞ்சை, சர்வதேச விலையில் இருந்து, 10 சதவீதம் குறைத்து வழங்க வேண்டும் என்பது, தொழில்துறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பருத்தி சீசன் நிறைவடைய, மூன்று மாதங்கள் மட்டுமே இருப்பதால், தினசரி பஞ்சு வரத்து, 18 ஆயிரம் பேல்களாக குறைந்துவிட்டது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்யும், இந்திய பருத்திக்கழகம், நுாற்பாலைகள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வாக, குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டும், 10 சதவீதம் விலை குறைத்து விற்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதி

நுாற்பாலைகளின் மொத்த உற்பத்தியில், மூன்றில் ஒரு பங்கு நுாலிழை ஏற்றுமதி செய்யப்படும் வரை, தொழில் நன்றாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, நுால் ஏற்றுமதி குறைந்ததால், நுாற்பாலை தொழில் ஸ்தம்பித்து போயுள்ளது. சில மாதங்களுக்கு, பஞ்சு இறக்குமதிக்கான, 11 சதவீத வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான், தரமான பஞ்சை இறக்குமதி செய்து, கட்டுபடியாகும் விலை கிடைக்கும். நுாலிழை ஏற்றுமதியும் செய்ய முடியும்.

- நுாற்பாலை உரிமையாளர்கள்.

விலை குறைப்பு அவசியம்

இந்தியாவில், சர்வதேச பஞ்சு விலையை காட்டிலும், பஞ்சு விலை அதிகமாக உள்ளது. நுாற்பாலை தொழில் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பஞ்சு இருப்பு வைத்துள்ள இந்திய பருத்தி கழகம், சர்வதேச விலையில் இருந்து, 10 சதவீதம் குறைத்து விற்பனை செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு வழங்கினால், இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்

விலை குறைப்பு அவசியம்

இந்தியாவில், சர்வதேச பஞ்சு விலையை காட்டிலும், பஞ்சு விலை அதிகமாக உள்ளது. நுாற்பாலை தொழில் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பஞ்சு இருப்பு வைத்துள்ள இந்திய பருத்தி கழகம், சர்வதேச விலையில் இருந்து, 10 சதவீதம் குறைந்து விற்பனை செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு வழங்கினால், இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்








      Dinamalar
      Follow us