/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
/
மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED : ஏப் 23, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு பெற்ற பிறகு, நேற்று கோவில் வளாகத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
இப்பணியில், தன்னார்வலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட, 90 பேர் ஈடுபட்டனர்.
இதில், ரொக்கத்தொகையாக, 15 லட்சத்து 43 ஆயிரத்து 685 ரூபாயும், 61 கிராம் 200 மில்லி கிராம் தங்கம்; 198 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இப்பணியின் போது, கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், கோவில் செயல் அலுவலர் தீபா, சரக ஆய்வாளர் சதீஷ்செந்தில்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

