ADDED : பிப் 18, 2025 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
திருப்பூர், அமராவதிபாளையத்தில் நேற்றுமுன்தினம் நடந்த சந்தைக்கு 913 கால்நடைகள் வந்தன.
கன்றுகுட்டி, 4,500 - 6,000 ரூபாய், காளை, 31 ஆயிரம் - 33 ஆயிரம் ரூபாய், எருமை, 28 ஆயிரம் - 30 ஆயிரம், மாடு, 32 ஆயிரம் - 34 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
'வரும் நாட்களில் விசேஷங்கள் எதுவும் இல்லாத நிலையில், மாடு வரத்து இரண்டாவது வாரமாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. மாடு வரத்து அதிகரிப்பால், 1.90 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது,' என, மாட்டுச்சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.