/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவர தொழிலாளர்களுக்கு கைவினை திட்ட முகாம்
/
சவர தொழிலாளர்களுக்கு கைவினை திட்ட முகாம்
ADDED : ஜன 11, 2025 09:03 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தொழில் மையமும், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் இணைந்து, கலைஞர் கைவினை திட்ட முகாம் நடத்தின.
மாநகர மாவட்ட செயலாளர் வடிவேல் வரவேற்றார். மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல், தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் ஜீவமதி, துணை செயலாளர் மருதாசலம், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் கணேசன், மாநகர் மாவட்ட பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன், உதவி பொறியாளர்கள் மணிவண்ணன், தருண்குமார் ஆகியோர் திட்டங்களை விளக்கினர். மாநகர அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநகர மாவட்ட துணை செயலாளர் வஞ்சி முத்து நன்றி கூறினார்.