/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல நிதி செலுத்த இணையதளம் உருவாக்கம்; தொழிலாளர்கள் மகிழ்ச்சி தொழிலாளர்கள் மகிழ்ச்சி
/
நல நிதி செலுத்த இணையதளம் உருவாக்கம்; தொழிலாளர்கள் மகிழ்ச்சி தொழிலாளர்கள் மகிழ்ச்சி
நல நிதி செலுத்த இணையதளம் உருவாக்கம்; தொழிலாளர்கள் மகிழ்ச்சி தொழிலாளர்கள் மகிழ்ச்சி
நல நிதி செலுத்த இணையதளம் உருவாக்கம்; தொழிலாளர்கள் மகிழ்ச்சி தொழிலாளர்கள் மகிழ்ச்சி
ADDED : அக் 02, 2024 06:35 AM
திருப்பூர்: நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக தொழிலாளர் நல நிதியினை செலுத்திட புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் அறிக்கை:
தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்ட விதிகளின்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என, தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும், தொழிலாளிகளுக்கு தொழிலாளர் நல நிதி தொழிலாளியின் பங்காக, 20 ரூபாய் மற்றும் நிறுவனத்தின் பங்காக, 40 ரூபாய் சேர்த்து மொத்தம், 60 ரூபாய் வீதம் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.
இதற்காக நிறுவனங்கள் நல நிதியினை ஆன்லைன் வழியாக செலுத்த வசதியாக 'வெப் போர்ட்டல்' http://lwmis.lwb.tn.gov.in/ என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக வேலை அளிப்போர் தங்கள் நிறுவனங்களை ஆன்லைன் வழியாக பதிவு செய்து, தொழிலாளர் நல நிதியினை செலுத்தி உடனடியாக ரசீதினை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மேலும், வேலையளிப்போர் தங்கள் நிறுவனங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு, 2024ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி, கொடுபடா தொகை போன்றவற்றை ஆன்லைன் வழியாக செலுத்திடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
வாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள நிறுவனங்களும் வெப் போர்ட்டலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுவரை, தொழிலாளர் நல நிதி செலுத்தாதவர்கள் நிறுவனம் துவங்கிய ஆண்டிலிருந்து தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். நிலுவை தொகை செலுத்துவதற்கான வசதியும், 'வெப் போர்டலில்' ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

