/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளைபொருளுக்கு பொருளீட்டு கடன்: விவசாயிகளுக்கு அழைப்பு
/
விளைபொருளுக்கு பொருளீட்டு கடன்: விவசாயிகளுக்கு அழைப்பு
விளைபொருளுக்கு பொருளீட்டு கடன்: விவசாயிகளுக்கு அழைப்பு
விளைபொருளுக்கு பொருளீட்டு கடன்: விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 04, 2025 09:01 PM

உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது; தற்போது கொப்பரை இருப்பு வைத்துள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து வகை விளைபொருட்களையும் இருப்பு வைத்து விற்பனை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வளாகத்தில், 11 குடோன்கள் விவசாயிகள் பயன்பாட்டுக்காக உள்ளது. விலை வீழ்ச்சி ஏற்படும் போது பொருட்களை இருப்பு வைக்கும் விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்க, பொருளீட்டு கடனும் வழங்கப்படுகிறது.
தற்போது வளாகத்திலுள்ள குடோன்களில், 50 கிலோ கொண்ட 1,150 மூட்டை கொப்பரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது; இந்த கொப்பரை இருப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு, 58 லட்சம் ரூபாய் வரை பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய வசதிகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும் என, ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

