/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய போட்டிகளுக்கு தேர்வு: மாணவியருக்கு பாராட்டு
/
தேசிய போட்டிகளுக்கு தேர்வு: மாணவியருக்கு பாராட்டு
ADDED : நவ 04, 2025 09:00 PM

உடுமலை: தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவியருக்கு கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான தடகள போட்டிகள், தஞ்சாவூரில் நடந்தது. இதில், கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், ஸ்ரீ வித்யா (9ம் வகுப்பு), 600மீ., ஓட்டப்பந்தயத்தில், வெள்ளியும், 400மீ., ஓட்டப்பந்தயத்தில், வெண்கலமும் வென்றார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவி சுவாதிகா, 80மீ., தடை தாண்டுதலில், வெள்ளி பதக்கமும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், பத்தாம் வகுப்பு மாணவி மதுவர்ஷா, 100 மீ., தடை தாண்டுதல் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றனர்.
இம்மாணவியர் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பள்ளி தாளாளர் சின்னராஜூ, முதல்வர் சாரதாமணிதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

